பிகார் மாநிலம் மோத்திஹரி மாவட்டத்தில் உள்ள சுகௌலி என்ற பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து தினமும் பல பள்ளிகளுக்கு இலவசமான மதிய உணவு அனுப்பப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று அதிகாலை அங்குள்ள சமையலறையில் ஊழியர்கள் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.