கரோனா பாதிப்பின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக திறன்சார் வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 25 வகையான பணிகள் கண்டறியப்பட்டுள்ளன.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரூ.50,000 கோடிக்கு புது திட்டம் - குடிபெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு
16:12 June 18
டெல்லி: கரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய ரூ.50,000 கோடிக்கு புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு, சுகாதாரம், சிறுகுறு தொழில் ஆகிய ஊரக வேலைவாய்ப்புகள் பலவற்றை ஒருங்கிணைத்து திட்டம் செயலாற்றப்படும். நாடு முழுவதும் உள்ள 116 மாவட்டங்களில்தான் தலா 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சார்பை உறுதி செய்யும் இந்த திட்டத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனக் கூறினார்.
மார்ச் மாத இறுதியில் கரோனா லாக்டவுன் அறிவிப்புக்குப் பின் பெருநகரங்களில் உள்ள சுமார் 8 கோடிக்கு தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிலுவை தொகையை செலுத்த வேண்டாம் - தொலைத்தொடர்பு அமைச்சகம்