ராஜஸ்தான் மாநிலம், தான்கஜி என்னும் பகுதியில், கடந்த மாதம் 26ஆம் தேதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருடன் சென்றுகொண்டிருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு காவலர் பணி!
ஜெய்ப்பூர்: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு காவலர் பணி வழங்கியுள்ளது ராஜஸ்தான் அரசு.
rajasthan
இச்சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு பணம் கேட்டு அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் அந்தக் கும்பல் மீது காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
சட்டம் ஒழுங்கு சரியில்லாததே இதற்குக் காரணம் என ஆளும் காங்கிரஸ் அரசை பாஜகவினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல் துறையினர் காவலர் பணியை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.