வரும் 2022-இல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முன்னோடி தான் ககன்யான் திட்டம். இதன் மூலம் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக ஆளில்லாத இரண்டு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இத்திட்டத்திற்காக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஆளில்லா விண்கலங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய பட்ஜெட் உரையின் போது, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ’ககன்யான் திட்டத்திற்காக நான்கு இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய விண்வெளித்துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடக்கப்பட்டுள்ளது.