தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம் - இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி

டெல்லி: இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கிவைத்தார்.

Gadkari to inaugurate IITF-2019 on Nov 14

By

Published : Nov 14, 2019, 9:02 AM IST

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை இன்று (நவ.14) தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியின் 39ஆவது பதிப்பு இதுவாகும். எளிதில் தொழில் தொடங்குவோம் (Ease of Doing Business) என்ற கருப்பொருளில் இந்தக் கண்காட்சி நடக்கிறது. எளதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில், 2014ஆம் ஆண்டு இந்தியா 142ஆவது தரவரிசையில் இருந்தது.

தற்போது இந்தியாவின் தனித்துவமான சாதனைகளால் 64ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வர்த்தக கண்காட்சி குறித்து இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா நமது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் 800 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களின் கணிசமான பங்களிப்பு உள்ளது. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மையமாக இருக்கும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கண்காட்சி அரங்குகள், பிராந்திய கலை மற்றும் கலாசாரம், உள்ளூர் கைவினைப்பொருள்களை ஊக்குவிக்கும் வகையிலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா பேட்டி
மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த தகவல்களையும் வசிஷ்டா பேசினார். அப்போது, காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் வகையில் கண்காட்சி நடக்கும் பள்ளிகளில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி வருகிற 27ஆம் தேதி வரை நடக்கிறது. பார்வையாளர்கள் இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்று பார்வையிடலாம்.

ABOUT THE AUTHOR

...view details