தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதத்துக்கு மதமில்லை என்பதை மெய்யாக்கிய பெண்ணின் இறுதிச் சடங்கு - இந்து முறைப்படி இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பெண்ணின் இறுதிச் சடங்கு

போபால்: ஜபல்பூர் அருகே பெண்ணின் இறுதிச் சடங்கு இந்து முறைப்படி செய்யப்பட்டு இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

two funeral customs
two funeral customs

By

Published : Dec 12, 2020, 5:14 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்தவர் பர்வீன். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மாண்ட்லாவில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்காக மதம் மாறிய பிரபா தனது பெயரை இஸ்லாமிய முறைப்படி பர்வீன் என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதற்கிடையே, பர்வீனுக்கு எந்த முறைப்படி இறுதிச் சடங்கு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக பர்வீனின் சகோதரி மாவட்ட நிர்வாகத்திடம் யோசனை கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட அலுவலர், கரிப் நவாஸ் குழுவிற்கு இதுகுறித்து அறிக்கை ஒன்றை அளித்தார். கரிப் நவாஸ் குழுவைச் சேர்ந்த இனாயத் அலி தலைமையில் இந்து மத பழக்கவழக்கங்களின் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பர்வீனின் இறுதிச் சடங்கு முதலில் இந்து பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி செய்யப்பட்டது. பின்னர் அவரின் உடல் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள்படி கல்லறைவரை ஊர்வலமாக எடுத்துச் செல்லபட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்துவாக பிறந்து இஸ்லாமியராக இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கு, இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதைப் பார்த்த மற்றவர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details