தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு - உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி

டெல்லி: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

Nirmala
Nirmala

By

Published : Mar 21, 2020, 10:39 PM IST

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடிப்படை சேவைகளை அளிப்பதற்கும், சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாதிரியான சூழ்நிலையில் அடிப்படை வசதிகளை அளிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் பாதிப்படையக் கூடாது. எனவே, 14ஆவது நிதி ஆணையத்தின்படி ஒதுக்க வேண்டிய தவணை நிதிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். முதல் தவணையாக தமிழ்நாட்டிற்கு 987.85 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 431 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சூழல்: தொழிலாளர்களுக்கு ரூ.1,000 இழப்பீடு

ABOUT THE AUTHOR

...view details