நாடு முழுவதும் கரோனா லாக் டவுன் காரணமாக முடங்கியுள்ள நிலையில், வேளாண் துறையினர் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்தச் சூழலில் விவசாயிகளை பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கான நிவாரணம் ரூ.15,000ஆக அதிகரிக்க வேண்டும் - எம்.எஸ். சுவாமி நாதன்
கரோனா லாக் டவுன் சிக்கலால் தவித்து வரும் வேளாண் துறையினருக்கு ரூ.15,000 நிவாரணம் தர வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
Farmer
பிரதமர் நிவராண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை, தற்போதைய இழப்புகளை சரிகட்டவே போதாத சூழலில், அடுத்தப் பருவத்தில் அவர்கள் வேளாண் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, கீழ் கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகள் பயிர்களின் அடிப்படை ஆதார விலையை சமமாக வழங்கி, அதன் பலன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
- வேளாண் தொழிலாளர்கள் வழக்கம் போல், பணிகளை மேற்கொள்ள அரசு பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- இந்த லாக் டவுன் காலத்தில் வேளாண்தொழில் தடையில்லாமல் இயங்க வேளாண் கருவிகள் தடையின்றி கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.
- ராபி பருவப் பயிர்கள் வீணாகாமல் கொள்முதல் செய்யவும்; அதைப் பத்திரமாக சேமித்து வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
- அடுத்த பருவத்திற்கான பணிகள் தொடங்க வேளாண் மக்கள் அனைவருக்கும் எந்தவித தடையின்றி கடன் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
- தனியாரிடம் வாங்கிய கடன்தொகைக்காக விவசாயிகள் பாதிக்காத வகையில், அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித்தொகையை செலுத்த காலக்கெடுவை அடுத்த பருவம் வரை நீட்டிக்க வேண்டும்.
- பிரதமரின் கிசான் யோஜ்னா நிவாரண நிதியிலிருந்து தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000த்தை ரூ.15,000ஆக உயர்த்தி, அரசு வங்கிக்கணக்கில் நேரடியாக சேர்த்திட வேண்டும்.
- விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த அவசரகால சூழலில் சிறப்பாக இயங்கிட அமைப்பை அரசு பலப்படுத்திட வேண்டும்.
- ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மூலம் வேளாண்துறை வேலை வாய்ப்பை அதிகரித்திட வேண்டும்.
- சந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சேமிப்புக் கிடங்குகளில் பயிர்களை இலவசமாக சேமித்து வைக்க அரசு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை பால் உற்பத்தியாளர்கள், தோட்டப் பயிர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அடுத்த பருவ நடவிற்குத் தேவையான பயிர்கள், விவசாயிகளுக்குத் தடையின்றி கிடைக்க உறுதிபடுத்த வேண்டும்.
- வேளாண் துறையில் ஈடுபடும் பெண்கள் மேம்படும் வகையில், பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ வேண்டும்.
இதையும் படிங்க: ஊரடங்கால் பரிதவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம்: காக்குமா மத்திய அரசு?
Last Updated : Apr 21, 2020, 9:11 PM IST