உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டின் கங்கை நதியில் நன்னீர் இன டால்பின் ஜோடி ஒன்று துள்ளிக்குதிப்பதைக் காணொலியாக எடுத்த அப்பகுதி ஐ.எஃப்.எஸ். அலுவலர் ஆகாஷ் தீப் பதவன் என்பவர் அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "ஒரு காலத்தில் கங்கை-பிரம்மபுத்திரா-மேக்னா நதிகளில் அதிகளவில் காணப்பட்ட நன்னீர் டால்பின்கள், இப்போது ஆபத்தில் உள்ளன. அவை நன்னீரில் வாழ்கின்றன. கங்கையில் அவற்றைக் காண்பது நற்பேறு" எனப் பதிவிட்டுள்ளார்.