ஊரடங்கு உத்தரவு நடைமுறைகளிலிருந்து சில பணிகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிப்பு, மின் விநியோகத்திற்கான மின்கம்பிகளை நடுவது, தொலைத் தொடர்புக்கான குழிகளை தோண்டுவது போன்ற பணிகளுக்கும், சிறிய வனங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.