புதுச்சேரி மாநிலத்தில் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி , இனிப்புகள் வழங்கப்பட்டன.
தியாகிகள் உதவித்தொகையை அதிரடியாக உயர்த்திய முதலமைச்சர்!
புதுச்சேரி: தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி, முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் நம்முடைய தியாகிகள் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். புதுச்சேரி 1954ஆம் ஆண்டு அதிகாரத்தை பெற்றாலும், 1964ஆம் ஆண்டில் தான் முழுமையான அதிகாரத்தை பெற்றது. துணைநிலை ஆளுநருடன் தேநீர் அருந்த செல்ல விருப்பமில்லை; சம்பிரதாயம் காரணமாகவே சென்றோம் என்று தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தியாகிகளுக்கு இதுவரை வழங்கி வந்த உதவித்தொகை ரூ.8 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.9 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.