தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலவச அரிசி வழங்கும் தீர்மானம் - நிராகரித்த கிரண்பேடி! - அமைச்சர்கள்

புதுச்சேரி: ரேஷனில் இலவச அரிசி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார்.

முதலைமச்சர்

By

Published : Sep 7, 2019, 6:53 PM IST

புதுச்சேரி மக்களுக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்குவதற்கு பதில், அதற்கான பணத்தை வங்கி கணக்கில் சேர்க்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து அரிசி மட்டுமே வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இலவச அரிசி வழங்கும் கோரிக்கையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார்.

ரேஷனில் இலவச அரிசி வழங்கும் தீர்மானத்தை நிராகரித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

இந்நிலையில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முதலைமச்சர் நாராயணசாமி தலைமையில் அரசு தீர்மானத்தின் நகலுடன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க சென்றனர். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ' புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்ற தீர்மானத்தை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்தார். இது குறித்து, மத்திய அரசிடம் புகார் அளிப்போம் நீதிமன்றத்தை நாடுவோம்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details