புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் கட்சிகள், வரவேற்றுள்ளன.
ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி- தீர்மானம் நிறைவேற்றம்! - pettition
புதுச்சேரி: சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக, என்.ஆர் காங்கிரஸ், கட்சிகள் வரவேற்றுள்ளன.
ADMK ANBALAGAN
இது குறித்து புதுச்சேரி சட்டசபையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அன்பழகன், ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி தடை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இன்று தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் மாதாமாதம் தடையில்லாமல் 20 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்த ஒரே தேசம், ஒரே திட்டத்தை, புதுச்சேரியிலும் வலியுறுத்த வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தி உள்ளோம் எனக் கூறினார்.