ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் நாராயனாத்ரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவனைத் தேர்தல் நெருங்குவதையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யச் சிறப்பு முயற்சி ஒன்றைக் கையாண்டுள்ளது. அதன்படி வாக்குரிமை உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் 10 நாட்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது நாராயனாத்ரி மருத்துவமனை. இந்த அறிவிப்பை அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சுனந்த குமார் ரெட்டி தற்போது அறிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு 10 நாட்கள் இலவச மருத்துவம் - ஆந்திராவில் ஆச்சர்யம்! - திருப்பதி,
அமராவதி: ஏப்ரல் 11 முதல் 22 வரையில் தனியார் மருத்துவமனை ஒன்று வாக்காளர்களுக்கு இலவச மருத்துவம் தர முன்வந்துள்ளது.
அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இலவச மருத்துவச் சிகிச்சையை வழங்க முடிவு செய்துள்ளது இம்மருத்துவமனை. இருதயப்பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை, மகப்பேறு பிரச்னை போன்ற அதிக செலவினங்களைக் கொண்ட சிகிச்சைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விளம்பரங்கள், சுவரொட்டிகள் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த பிரபலங்கள், தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடுவது வழக்கம். இம்முயற்சி விழிப்புணர்வுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் உடல் நலத்திற்கும் சேர்ந்தே பாதுகாப்பை உருவாக்கும் என்பது சிறப்பம்சமாகும்.