தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயற்சி! - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தொழிலதிபரிடமிருந்து பணம் பறிக்க முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறை உயர் அலுவலர்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்

By

Published : Jun 26, 2020, 4:45 PM IST

பிகானேர் (ராஜஸ்தான்):தனது பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்து மோசடி செய்ய முயன்ற நபர் குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத், காவல் உயர் அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிகானேர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான வினோத் பாஃப்னாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு வந்தது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பணம் கேட்டார்.

பின்னர் அவர் மேலும் பல முறை அழைத்து இதுபோன்று பணம் கேட்க, சந்தேகமடைந்த பாஃப்னா அழைப்புகளின் உரையாடல்களை பதிவுசெய்து அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்துக்கு அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த காவல் துறையிடம் அமைச்சர் கோரியுள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details