மன்னர் ஆட்சி இருந்த பிரெஞ்சு நாட்டில், 1739ஆம் ஆண்டு மக்கள் புரட்சி காரணமாக மக்களாட்சியாக மாறியது. அந்த நாளை (ஜூலை 13) அந்நாட்டு மக்கள் தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றனர். அந்தக் காலகட்டத்தில் மின் வசதி இல்லாததால் தேசிய தினத்தை அம்மக்கள் தீப்பந்தம் ஏந்திச் சென்று கொண்டாடினர்.
பிரெஞ்சு தேசிய தினம்; மின் விளக்குகள் ஏந்தி ஊர்வலம்! - கடற்கரை சாலை
புதுச்சேரி: புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற மக்கள் தங்களது தேசிய தினத்தில் மின் விளக்குகள் ஏந்தி கடற்கரை சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.
மின் விளக்குகள் ஏந்தி ஊர்வலம்
இந்நிலையில், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற மக்கள் அனைவரும் குடும்பத்துடன் மேளதாளம் முழங்க மின் விளக்குகளுடன் ஊர்வலமாகச் சென்று நேற்று இரவு தங்கள் தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.