கரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, மன அழுத்தத்திற்கு உள்ளாகும் கரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஆகஸ்ட் 27ஆம் தேதி அவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.