புதுச்சேரியில் மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், ”புதுச்சேரியில் ஏற்கனவே 40 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களில் ஒன்பது பேர் குணமாகி வீடுசென்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி 35 பேர் கரோனா நோய்த் தொற்று காரணமாக புதுவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களும் அடங்குவர்.