தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் பெட்ரோல் ஊற்றி வாகனம் எரிப்பு: இருவர் உயிரிழப்பு - முன்விரோதம் காரணமாக இருவர் எரித்து கொலை

ராஜஸ்தான்: பிகேனர் பகுதியில் நான்கு சக்கர வாகனங்களில் சென்ற நான்கு பேரை, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Four doused with petrol and set afire by miscreants in Rajasthan
Four doused with petrol and set afire by miscreants in Rajasthan

By

Published : Mar 9, 2020, 9:39 AM IST

ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டம் நோக்கா என்ற இடத்தில் ஜீப் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில், ஜீப்புக்குள் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவர் உயிரிழந்ததையடுத்து இருவர் பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பிகேனர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காயமடைந்தவர்கள் இருவரின் பெயர் சாந்தி லால், அதிஜ் சிங் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க...இளம்பெண்ணை அடித்துக்கொன்ற வழக்கில் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details