டெல்லி: 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக, அதே ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் பாலகோட் என்னும் பகுதியில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக, இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசு இதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தது. இந்நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு முன்னாள் தூதர் ஷாஃபர் ஹிலாலி, பாலகோட் தாக்குதலில் பயங்கரவாதிகள் 300 பேர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.