ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேஜ்பகதூர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது காணொளி ஒன்றை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார். அந்த காணொளியில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என பகீர் குற்றச்சாட்டைக் கூறியதும், இந்த சர்ச்சை குறித்து விசாரனை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதேபோல, விதிமுறைகளை மீறி காணொளி வெளியிட்டதாக தேஜ் பகதூர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு பணிநீக்கம் செய்தது.
மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கும் முன்னாள் ராணுவவீரர்!
சண்டிகர்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தற்போது தேஜ் பகதூர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்குவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாரணாசியில் உள்ள நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் தன்னிடம் தொடர்பில் இருக்கின்றனர். வாரணாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் எனது பெயரையும் இனைத்துள்ளேன். கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்காகத் தயாராகி வருகிறேன். ஊழல் பிரச்னையை மையப்படுத்தியே இத்தேர்தலை சந்திக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கும் பிரபலங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.