கேரள மாநிலம் சைலண்ட் வேலி தேசியப் பூங்காவின் தெற்கு பிரிவின் அருகே பலத்த காயத்துடன் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டுள்ளனர். இந்த காட்டு யானையை வனத்துறையினர் மீட்டது குறித்து கேரள வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் கே.ராஜூ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்று(ஜூன் 4) வெளியிட்டார்.
இதுகுறித்து அந்த பதிவில் அவர், பாலக்காடு, திருவிழாம்குன்னு அருகே வெல்லியார் ஆற்றில் சைலண்ட் வேலி தேசிய பூங்கா, மன்னார்காட் பிரிவைச் சேர்ந்த கர்ப்பிணி காட்டு யானையின் சோகமான மரணம் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
காட்டுப் பன்றிகளுக்காக வெடிமருந்து கலந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை அந்த கர்ப்பிணி யானை தவறுதலாக எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது வனத்துறையினர் மீட்டிருக்கும் இந்த காட்டு யானையின் வாயிலும், வயிற்றின் அடிப்பகுதியிலும் காயம் ஏற்ப்பட்டிருந்தது. அதன்காரணமாக அந்த யானையால் தண்ணீர்,உணவு என எதையும் உண்ண முடியவில்லை. பின்பு அந்த யானையை அமைதிப்படுத்தி உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அதுவே தானாக உணவை உண்ணும் அளவிற்கு வந்துள்ளது. அதன் காயங்கள் சரியான பிறகு காட்டுக்குள் விடப்படும்.
இந்த யானைக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் மற்ற யானைகளோடு சண்டையிட்டதால் ஏற்பட்டவையாகும். மனிதர்களால் ஏற்படவில்லை, இதில் வதந்திகளுக்கு வேலை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.