தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அந்நிய நேரடி முதலீட்டில் உலகளவில் இந்தியா 12ஆவது இடம்!

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு, இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

FDI in India
FDI in India

By

Published : Jun 16, 2020, 11:18 PM IST

அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment) என்பது ஒரு நாட்டில் மற்றொரு நாட்டு நபரோ, நிறுவனமோ தயாரிப்பு அல்லது வணிகத்துறையில் நேரடியாக முதலீடு செய்வதாகும். இத்தகைய முதலீடு, அந்நாட்டில் உள்ளதோர் நிறுவனத்தை வாங்குவதன் மூலமோ அல்லது தனது நிறுவனத்தினை விரிவுபடுத்துவதாலோ இருக்கலாம். இது அந்த நாட்டு நிறுவனங்களின் பங்குகளிலோ அல்லது பிணைப்பத்திரங்களிலோ முனைப்பற்ற முதலீடு செய்வதல்ல.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட உலக முதலீட்டு அறிக்கை 2019-2020ஆம் ஆண்டில், இந்தியா அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் நாடுகளில், ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் 51 பில்லியன் டாலர் இந்தியா மூலம் வரவு கிடைத்ததாகவும்; இது 2018ஆம் ஆண்டில் பெறப்பட்ட 42 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டில் இருந்து அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது உலக நாடுகளை ஒப்பிடுகையில் அந்நிய நேரடி முதலீட்டில், இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதால், நிறைய நிறுவனங்கள் முதலீடு செய்ய இந்தியாவைப் பயன்படுத்துவார்கள் என்றும்; இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் விரைவில் மேம்படும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details