தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Kulgam  Hardmand Guri  Manzgam  Encounter  Jammu Kashmir  Security Forces  Police  Terrorists  Gunfight  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை!  பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை  ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு
Kulgam Hardmand Guri Manzgam Encounter Jammu Kashmir Security Forces Police Terrorists Gunfight ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை! பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு

By

Published : Apr 4, 2020, 3:48 PM IST

ஜம்மு காஷ்மீர் யூனியன் குல்காம் மாவட்டத்திலுள்ள டி.ஹெச் போரா பகுதியில் பயங்கரவாதிகள் நான்கு பேர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர், மாநில காவலர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தனர். இந்நிலையில் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பாதுகாப்பு படையினரும் காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமுற்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் நந்திமார்க் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் ஜம்மு காஷ்மீர் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் இரு குழுக்கள் இடையே துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details