தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சாதனை நிகழ்த்திய மருத்துவர்கள்!

டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரகாண்டில் ரத்தப் பரிசோதனைக்காக ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் ரத்தம் கொண்டு சென்று மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

By

Published : Jun 8, 2019, 5:42 PM IST

Updated : Jun 8, 2019, 7:09 PM IST

ட்ரோன் மூலம் சாதனை நிகழ்த்திய மருத்துவர்கள்.

உத்தரகாண்ட் மாநிலம், நந்தகான் மாவட்ட மருத்துவமனையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ட்ரோன் மூலம் ரத்த மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் 18 நிமிடங்களில் டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரி வந்து சேர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சாதனை நிகழ்த்திய மருத்துவர்கள்

இந்த முறை மேலும் விரிவுபடுத்தப்படும்போது, வாகனப் போக்குவரத்து இல்லாத கிராம மக்களும் இந்த சேவை மூலம் பயன்பெற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jun 8, 2019, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details