குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு, குடிநீர் பாட்டில்கள், செருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த ஊருக்கு நடந்துச் சென்ற தொழிலாளர்களை அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை உதவியது எனவும் தெரிவித்துள்ளது.
குடிபெயர்ந்தோருக்கு இலவச மருந்து, உணவு வழங்கும் மத்திய அரசு
டெல்லி: சாலைகளில் நடந்துச் சென்ற குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் வழங்கிய உதவிகள் தவிர்த்து, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1.63 கோடி உணவுப் பொட்டலங்களும், 2.10 கோடி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் தொடர்பான வழக்கில் மத்திய அரசுகள் இந்த வாக்குமூலத்தை கொடுத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் தரப்பில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் தீர்ப்பை ஜூன் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக்கூறியது.