நகரங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் இன்று இணையதளத்திலேயே ஆர்டர் செய்து உணவு சாப்பிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்றாற்போல் டெலிவரி நிறுவன ஊழியர்களும் (Delivery Boy) ஆர்டர் செய்த சில நிமிடங்களில் உணவை கொண்டுவந்து-விடுகிறார்கள். இதனால் மக்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
டெலிவரி என்ற பெயரில் டின் பீர் விற்பனை - delivery boy
காந்திநகர்: வதோதரா நகரில் டெலிவரி என்ற பெயரில் டின் பீர் விற்பனை செய்துவந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
டெலிவரி என்ற பெயரில் டின் பீர் விற்பனை
இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ராகுல் மஹிதா என்ற நபர் உணவு டெலிவரி என்ற பெயரில் டின் பீர்களை டெலிவரி செய்துவந்தார். தகவலறிந்த காவல் துறையினர் அச்சிறுவனை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
Last Updated : Aug 19, 2019, 12:34 PM IST