ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயல் நேற்று கடும் சீற்றத்தோடு, நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள், வீட்டு கூரைகளை சூறையாடிய இப்புயல், அம்மாநில்தில் உள்ள பிஜு பட்னாய்க் சர்வதே விமான நிலையத்தில், பயணிகளின் டர்மினல் கட்டடத்தின் கூரை மற்றும் முகப்பையும் சேதம் ஆக்கியது. இதனால் நேற்று விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
மீண்டெழும் ஒடிசா: விமான போக்குவரத்து சேவை தொடக்கம்! - odissa fani
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயலால் சேதம் ஏற்பட்ட பிஜு பட்நாயக் சர்வதேச (புவனேஷ்வர்) விமான நிலையம் சரிசெய்யப்பட்டு இன்று வழக்கம்போல் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
ஃபானியில் சேதமடைந்த புவனேஷ்வர் விமானம் போக்குவரத்து சேவை தொடக்கம்
இன்று புயல் ஒடிசாவை விட்டு அகன்றதால், சேதம் அடைந்த விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முடிக்கி விடப்பட்டு, இன்று வழக்கம்போல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.