1992-93ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாகவும், சாய்சபா கருவூலப் பணத்தில் ரூ.33.67 கோடி மோசடி செய்ததாகவும் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
அதில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.