இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஆளுநர் தங்கர், வெற்று வாதங்கள் செய்வதையும், மற்றவர்கள் மீது குறை சொல்வதையும், மக்களை மடை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதையும் விட்டுவிடுங்கள், கரோனா தொற்றின் காரணமாக நாம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என்றார்.
மத்திய அரசின் அணுகுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டது என்றும், தேவைகளுக்கு ஏற்ப மத்திய அரசு மாநிலங்களுக்கான உதவிகளை செய்துவருவதாகவும் அவர் கூறினார்.
நமது மக்களை காப்பதே நமது பணி. ஆளுநருக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் கத்தியைக் கூர்மைப்படுத்தும் நேரம் இதுவல்ல எனவும், நிகழ்காலத்திலிருந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் மம்தா பானர்ஜிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, மாநிலத்தில் முறையாக ஊரடங்கு உத்தரவுகள் கடைபிடிக்கப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மத்திய அரசு இரண்டு மத்திய அமைச்சரவைக் குழுக்களை அனுப்பியதையடுத்து மம்தா பானர்ஜி, ஆளுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: கரோனா கட்டுப்பாடுகள் தொடரும்: மம்தா பானர்ஜி