டெல்லியில் ஐந்து மணி நேர ஜிஎஸ்டி கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பல மாநிலங்கள், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கான உறுதிப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், மத்திய விற்பனை வரி மீதான வாக்குறுதியை முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றாத நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தில் மத்திய அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
காங்கிரஸ், ஜிஎஸ்டி இழப்பீட்டில் தேவையற்ற அரசியல் செய்கிறது - நிர்மலா சீதாராமன் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி : ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரத்தை தேவையற்ற வகையில் அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
fm-hits-out-at-opposition-for-politicising-gst-compensation-issue
தற்போதைய நிலைமை குறித்த கவலைகள், இழப்பீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பதட்டம் என்னுள் இருந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டத்தில், ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து மாநிலங்களின் கருத்துக்களை கணக்கில்கொண்டு, மாநிலங்களின் கூடுதல் செலவுகள், தேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.