அஸ்ஸாம் மாநில பிரம்மபுத்திரா ஆற்றில் இருந்து வந்த வெள்ள நீரால் திப்ருகரில் உள்ள ரங்கா மோலா, மிரி போன்ற கிராமங்களில் இருந்த வீடுகள் அனைத்தும் பெருத்த சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக அங்கிருக்கும் 95 குடும்பங்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கும் கட்டாயத்தில் உள்ளனர்.
அஸ்ஸாம் வெள்ளம்: வீடுகளை இழக்கும் பொதுமக்கள் - மக்களுக்கு கட்டாயம்
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்கும் நிலை உருவாகியுள்ளது.
Assam flood
இந்நிலையில், மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் சென்று தற்காலிகமாக தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இதுவரை அஸ்ஸாம் மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.