தமிழ்நாடு

tamil nadu

வெள்ள நீர் பாதிப்பு; தடுப்புச்சுவர் திட்டம் தடுத்து நிறுத்தம்-மல்லாடி கிருஷ்ணாராவ்!

By

Published : Aug 9, 2019, 8:26 PM IST

புதுச்சேரி: மழை வெள்ள தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்ததாக அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

FLOOD SITUATION

இதுகுறித்து யானம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வெள்ள தடுப்புச்சுவர் திட்டம் தடுத்து நிறுத்தம் பற்றி பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

’கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் யானம் பகுதி முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் ஏற்படும்போது பாதிப்பிலிருந்து தடுப்பதற்காக மத்திய அரசு 136 கோடி ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு திட்டம் செயல்படுத்த இருந்தது.

ஆனால் இத்திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதி தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஏற்கனவே கிரண்பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில் தற்போது சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெள்ளத்தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் தடுத்ததாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details