மத்திய பிரதேச மாநிலம் திக்கம்கர் மாவட்டத்தின் கார்கபூர் என்னும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுவர் என ஐந்து பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: காவல் துறை விசாரணை! - தூக்கிட்டு தற்கொலை
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Family members committed suicide
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட ஐந்து பேரின் கால்களும் தரையில் படும்படி உள்ளதால், இறப்பில் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.