மத்திய இந்தியாவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நக்சல்களின் தாக்கத்தை குறைக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
மகாராஷ்டிராவில் நக்சல்கள் படுகொலை - மகாராஷ்டிராவில் நக்சல்கள் படுகொலை
மும்பை: மகாராஷ்டிராவில் காவல்துறையினர் மேற்கொண்ட என்கவுண்டரில் ஐந்து நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்போது, காவல்துறையை நோக்கி நக்சல்கள் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் காவல்துறையினர் சரமாரியாக சுட்டனர். அதில், ஒரு பெண் நக்சல் உள்பட ஐவர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "கட்சிரோலி காவல்துறையின் சிறப்பு குழு மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர். காவல்துறை அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மற்ற நக்சல்கள் தப்பி ஓடினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!