ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் 12 நாட்களுக்கு பிறகு இந்திய விமானப்படை நேற்று ஆகாய மார்க்கமாக தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் பயிற்சி மையம், பதுங்கு குழிகளை அழித்தது.
எல்லையில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை வீரர்கள்! - ஜம்மு
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கேல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 5.30 மணியளவில், ஜெய்ஸ்-இ- முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப்படை முகாம் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர்.சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த, இந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கேல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.