புதுச்சேரியில் தேசிய ஊரடங்கு காரணமாக நாற்பதிற்கும் மேற்பட்ட நாட்களாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனிடையே ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பின் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் கட்டுமர மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்குச் சென்று, மீன்பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
மீனவர்கள் விசைப்படகுகளை இயக்க முடியாததால், அவற்றை தேங்காய்த்திட்டு துறைமுகப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். வழக்கமாக, மீன்பிடித் தடைக்காலத்தின்போது, மீனவர்கள் தங்களின் படகுகளை சரிபார்ப்பதும் வழக்கமானது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு இப்பணிகளில் மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை .