புதுச்சேரி குருசு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை சவேரியார் பேராலயத்திற்கு எதிரே வழிமறித்து, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் லோகநாதனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ‘பழிவாங்கும்’ வெறிச் செயல் - சாலையில் மீனவர் வெட்டிக்கொலை! - fishmer murder by 5 people on public
புதுச்சேரி: கடற்கரை அருகே அடையாளம் தெரியாத கும்பல் மீனவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கதிர்காமம் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆம்பூர் சாலையில் கொல்லப்பட்ட மீனவர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடைபெற்று உள்ளது எனத் தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறல்ல’ - உயர் நீதிமன்றம்!