பிரெஞ்சு நாட்டு தூதர் ஜீக்லர் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், இந்திய - பிரெஞ்சு இரு நாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டுகள் உறவை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருநாடுகளின் உறவை மேலும் மேம்படுத்த இந்தோ-பிரெஞ்சு தொழில்நுட்பத்தில் ரஃபேல் விமானம் வாங்க இந்திய முடிவு செய்து கடந்தாண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களில் ரஃபேல் விமானம் ஒப்படைக்கப்படும் - பிரெஞ்சு தூதர் - Delivered In 2 Months
போபால்: முதல் ரஃபேல் விமானம் இரண்டு மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரெஞ்சு நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமானம்
அதன்படி 36 விமானங்கள் இந்தியாவிற்கு வழங்க பிரெஞ்சு முடிவு செய்து அதற்கான உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக முதல் ரஃபேல் விமானம் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்றார். ரஃபேல் விமான கொள்முதலில் ஊழல் நடந்தாக குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்னும் இரண்டு மாதத்தில் முதல் விமானம் இந்தியா வரவுள்ளது.