தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை தாராவியில் கரோனாவுக்கு பலியான முதல் உயிர்! - first corona positive case reported in mumbai dharavi

corna
corna

By

Published : Apr 1, 2020, 10:14 PM IST

Updated : Apr 1, 2020, 11:40 PM IST

22:04 April 01

மும்பை: இந்தியாவின் அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதியான மும்பை தாராவியில் 56 வயது நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

எந்த வித வெளிநாட்டு பயணங்களிலும் ஈடுபடாத இந்த நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. ஏழு பேர் நிறைந்த இவரது குடும்பம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த 56 வயது நபர், சியோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி இந்த நபர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்றவற்றால் இந்த நபர் அவதிப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இவரது வீடு அமைந்திருக்கும் பகுதி மும்பை மாநகராட்சி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 1, 2020, 11:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details