மலப்புரம் (கேரளா): தீவிர ரத்தப்போக்கால் அவதிக்குள்ளான கர்ப்பிணியை, ஆற்று வெள்ளத்தைக் கடந்து தீயணைப்புத் துறையினர் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா (20), சாலியார் ஆற்றின் அருகேயுள்ள முண்டேரி தரிப்பப்பொட்டி மலை கிராமத்தில் வசித்துவருகிறார். நேற்று (செப். 11) மாலை அவருக்குத் தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை செல்வதற்கு ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டும்.
கர்ப்பிணியை ஆற்றைக் கடத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் ஆனால் அங்கு பெய்துவரும் கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
கர்ப்பிணியை ஆற்றைக் கடத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் அப்துல் கஃபூர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன், ரப்பர் படகில் ஆற்றில் பயணப்பட்டு காஞ்சனா இருந்த இடத்தை அடைந்தனர். பின்னர், அவரை அப்படகிலேயே மீட்டு இக்கரைக்கு கொண்டுவந்தனர்.
கர்ப்பிணியை ஆற்றைக் கடத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் வெள்ளோட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், இந்த அசாத்திய செயலை தீயணைப்புத் துறையினர் வெற்றிகரமாக முடித்துக் காட்டினர். இதனைத் தொடர்ந்து அங்கு தயார் நிலையிலிருந்த அவசர ஊர்தியில் காஞ்சனா ஏற்றப்பட்டு நிலம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
உயிரை பணயம் வைத்து 3 மாத கர்ப்பிணியைக் காத்த தீயணைப்புத் துறையினர்! தீயணைப்புத் துறையினரின் இந்த அசாத்திய செயலைக் கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.