சேதராப்பட்டு பகுதியில் பல தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்குள்ள ஒரு ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கரமாக தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில், கட்டுக்கடங்காத தீயானது அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியே கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! - தீ விபத்து
புதுச்சேரி: தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாயின.
fire
புதுச்சேரி, வில்லியனூர், சேத்துப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீ பற்றியதற்கு காரணம் மின் கசிவா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் மோசடி: கணக்காளருக்கு வலைவீச்சு