டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிற்பகல் நேரத்தில் கீழ் தளத்தில் ஏற்பட்ட சிறு மின் கசிவு காரணமாக, வளாகத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து! - தீயணைப்பு படை
டெல்லி: தீயணைப்பு படையினரின் பெரும் முயற்சியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயானது மளமளவென முதல் ஐந்து தளங்கள் வரை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு 34 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தளங்களில் மருத்துவ ஆய்வு கூடங்கள் மற்றும் மாணவர்களின் பயிற்சி அறைகள் தான் என்பதால் நோயாளிகளுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.