தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்யாண் சிங்கிற்கு வாட்ஸ் ஆஃப் மூலம் கொலை மிரட்டல்! - கல்யாண் சிங்

அலிகர்: உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வாட்ஸ் ஆஃப் வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மீது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

whatsapp
whatsapp

By

Published : May 7, 2020, 7:53 AM IST

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்து வாட்ஸப்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவேந்திர பால் சிங், எஸ்எஸ்பி முனிராஜிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கல்யாண் சிங்கிற்கு எதிராக மிகவும் மோசமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ குறித்து விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீது பரிசோதனையை தொடங்கிய அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details