கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கண்காணிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இருப்பினும் பள்ளிகள் கல்லூரிகள் கல்வி சார்ந்த நிறுவனங்கள் திறப்பது தொடர்பாக அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் உள்துறை அமைச்சகம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவிக்கும் முடிவுகளை பொறுத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ஹைபோவால் பகுதியில் உள்ள பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுள்ளன.
இது தொடர்பாக அம்மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அப்பள்ளி முதல்வர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.