மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியதால் காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து அம்மாநில பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காணொலியை காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீது குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சரான திக்விஜய் சிங், காங்கிரஸ் சார்பாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :குப்பைக் கிடங்குபோல் காட்சியளிக்கும் மருத்துவமனை - சாடும் தெலங்கானா எம்.பி.!