சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா அமேசான் இந்தியாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் சில்லறை விற்பனையாளரான அமேசான் இந்தியா, சீக்கிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதில், தரை விரிப்பு மற்றும் குளியலறை விரிப்பு உள்ளிட்ட பொருட்களில் சீக்கியர்களின் பொற்கோயில் படங்களை அச்சிட்டு சந்தைப் படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொற்கோயிலின் படங்களை அச்சிட்டு கழிப்பறை பாய்களை விற்பனைக்கு வைக்க அனுமதித்ததற்காக அமேசான் மீது இந்த வழக்கு தொடர்வதாகவும் மஞ்சீந்தர் சிங் சிர்சா ட்வீட் பதிவிட்டுள்ளார்.
மேலும், பொற்கோயிலின் படங்களுடன் அச்சிடப்பட்ட குளியலறை விரிப்புகளைக் காட்டும் சில படங்களையும் வெளியிட்டுள்ளார் .