ஒடிசாவின் கண்டகிரி குடிசைப் பகுதிகளிலுள்ள குழந்தைகள் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை, தங்களுக்கே உரித்தான முறையில் எதிர்கொண்டுவருகின்றனர்.அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சமாளிக்க இங்குள்ள குழந்தைகள் புதுமையான, மக்களுக்கு பயன்படுக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த குடிசைப் பகுதி முழுவதும் சிறு சிறு பிளாஸ்டிக் துண்டுகளால் நிரம்பியுள்ளது. இந்த மாணவர்களோ, அந்த பிளாஸ்டிக் குவியல்களைக்கொண்டு ரோபோக்களை உருவாக்கிவருகின்றனர் என்றால் பலருக்கும் அதை நம்புவது கடிணமாகவே இருக்கும். பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மற்ற கழிவு பொருட்களிலிருந்து மனிதனைப் போல இருக்கும் அழகிய ரோபோக்களை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு அவர்கள் உருவாக்கியுள்ள வோக்கூம் க்ளீனர்களின் சுத்தப்படுத்தும் திறனைக் கண்டு யாராலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இவர்களின் இந்த புதிய முயற்சியால், பிளாஸ்டிக் கழிவுகளை புதிய வகையில் பயன்படுத்த முடிகிறது. மேலும், இது சுற்றுச்சூழலுக்கும் பெருதவியாகவே இருக்கிறது.
இந்த குழந்தைகள் யாரும் பொறியாளர்களோ, எலக்ட்ரீசியன்களோ அல்லது இந்த தொழில்நுட்பங்கள் குறித்து மெத்த படித்த அறிவாளிகளோ இல்லை. இக்குழந்தைகள் ஆர்வத்துடன் உருவாக்கும் இதுபோன்ற விஷயங்கள், இதுகுறித்து மெத்த படித்தவர்களின் அறிவையும் கலைத்திறனையும் கூட மிஞ்சிவிடுகிறது.
இந்த குழந்தைகள், தங்களுக்கு கிடைத்த பெரும்பாலான நேரத்தை இதுபோன்ற மக்களுக்கு பயன்படக்கூடிய ரோபோக்கள், விளக்குகளை உருவாக்குவதிலேயே செலவிடுகின்றனர் இங்குள்ள சில மாணவர்கள், தானாக திறந்துகொள்ளும் கதவுகளின் மாதிரிகளையும் உருவாக்கியுள்ளனர். நம்மைச் சுற்றி அதிகரித்துவரும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு, இது போல மக்களுக்கு தேவையான பொருள்களை உருவாக்குவதே இவர்களது நோக்கம்.
Children from unprivileged sections create robots from plastic waste இந்த குழந்தைகள் தங்கள் தொழில்நுட்ப அறிவை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள விரும்பினாலும், போதிய அளவு நிதி இல்லாததால் அவர்களால் படிக்க இயலவில்லை. ஆனால் இப்போது சில காலமாக புவனேஸ்வரின் உன்முக்தா அறக்கட்டளையின் உதவியுடன் அவர்கள் கல்வி கற்கத்தொடங்கினார். இந்த அறக்கட்டளை இக்குழந்தைகளின் திறனை மேம்படுத்திக்கொள்ள இலவச பயிற்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடையால் முன்னேறும் ஒடிசா கிராமம்!