தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவை அரசு கொண்டாடும் பரியேறும் பெருமாள் - இயக்குநருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு ! - Periyarum Perumal movie get award

புதுச்சேரி: 2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதிற்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வாகியுள்ள நிலையில், புதுச்சேரி பகுதியில் பல்வேறு தரப்பினர் அப்படத்திற்கு ஆதரவாக விளம்பரத் தட்டிகளை அமைத்து வருகின்றனர்

புதுவை அரசு கொண்டாடும் பரியேறும் பெருமாள்...

By

Published : Sep 11, 2019, 10:39 PM IST

புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக் கழகம், அல்லயன்ஸ் பிரான்ஸ் சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா புதுவை தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் வரும் 13ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெறும் பரியேறும் பெருமாள்.

இதில் 2018ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மத்திய அரசு ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறது. அந்த திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழித்திரைப்படங்களை தேர்வு செய்து புதுவை அரசு விருது வழங்கி வருகிறது.

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது தமிழ் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வழங்குகிறார். அன்றைய தினம் மாலை இந்தத் திரைப்படம் இலவசமாக திரையிடப்படுகிறது. இதற்கான விளம்பர தட்டிகள் நகரின் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.


ABOUT THE AUTHOR

...view details