தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய வளர்ச்சிக்கு மூலதனமாகும் கூட்டாட்சி கட்டமைப்பு!

நம் நாட்டில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் குறைவான பொறுப்புகளும் கடமைகளுமே உள்ளது. இருப்பினும் வருவாயின் பெரும்பகுதி மத்திய அரசுக்கே செல்கிறது. இதுமட்டுமின்றி, சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது.

Federation of states
Federation of states

By

Published : Feb 1, 2020, 12:09 PM IST

இந்தியாவை மாநலங்களின் கூட்டமைப்பு என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால் இந்தியா ஒரு முழு கூட்டாட்சி அமைப்பாக இயங்கவில்லை. ஓர் உன்மையான கூட்டாட்சியில், எந்தவொரு மாநில அரசும் மத்திய அரசை நம்பியிருக்கத் தேவையில்லை. அதேபோல எந்தவொரு மாநிலத்தின் எல்லையை மறுவரையறை செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

ஆனால் நமது அரசியலமைப்பின் 2 மற்றும் 3ஆவது சட்டப் பிரிவுகளின்படி, புதிதாக மாநிலங்களை உருவாக்கவும், அவற்றின் எல்லைகளை மாற்றவும், மாநிலங்களின் பெயர்களை மாற்றவும் நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான மாநிலங்கள், அந்ததந்த மாநிலங்களின் ஒப்புதலுடனும் தேசத்தின் ஒருமித்த கருத்துடனேயே உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மக்களின் விருப்பப்படி மொழிவாரியான மாநிலங்களும் அமைதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே, அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 இருந்தபோதும், உலகிலுள்ள மற்ற நாடுகளைப்போல அல்லமால் இந்தியாவல் ஒருங்கிணைப்போடும் ஒருமைப்பாடோடும் இயங்கமுடிகிறது.

அகில இந்திய சேவைகள் என்பது கூட்டாட்சி தத்துவங்களுக்கு எதிராக இருந்தாலும், தேசத்தின் நன்மைக்காக அவை தொடரப்பட்டுள்ளது. உலகிலுள்ள மற்ற அரசியலமைப்புகள் போல அல்லாமல், இந்திய அரசியலமைப்பில் மாநில அரசியல் எவ்வாறு நடைபெறவேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆளுநர்களை நியமிப்பது என்பது கூட்டாட்சி சித்தாந்தங்களுக்கு எதிரானது. ஏனென்றால், அவை மக்களால் தேர்ந்தேடுக்கும் பதவி அல்ல. மேலும், சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது காலனி ஆட்சியைப் போலவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் உள்ளது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்

அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து அட்டவணை 7இல் குறிப்பிடப்பட்டுள்ளது போல, மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒத்திசைவு பட்டியல் என்று ஒன்றை உருவாக்கி, மாநில அரசுக்களால் முடிவெடுக்க இயலாத விஷயங்கள் குறித்தும், முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநில பட்டியலிலுள்ள சிலறவற்றை மாநிலங்களவையின் மூலமும் மத்திய அரசுக்கு மாற்ற, அவர்களுக்கு அதிகாரம் உண்டு. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால், அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், நமது நாடு கூட்டாட்சி முறைக்கு பதிலாக ஒற்றையாட்சி முறைக்கு வந்துவிடுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் விரும்பும்பட்சத்தில், மாநிலங்களுக்கிடையான பிரச்னை குறித்தும் மத்திய அரசால் நடவடிக்கைகள் எடுக்க முடியும். சர்வதேச பிரச்னை பற்றி முடிவெடுக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு பதில், இதுபோல பல்வேறு வடிவங்களிலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. இது முடிவில்லா ஒற்றையாட்சிக்கு வழிவகுத்துள்ளது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

இந்தியக் குடியரசு உருவாக்கப்பட்டவுடன், மாநிலங்களைச் சார்ந்த பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால், உள்ளூர் நிலைமைகளுக்கு தொடர்பே இல்லாமல் பல்வேறு துறைகளின் சட்டங்கள், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி தற்போது உள்ளது. இவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. இதேபோல புதிய நீதிமன்றங்களை அமைப்பது, கீழமை நீதிமன்றங்களில் மாற்றங்களை மேற்கொள்வது, விரைவான நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் அனுமதி என்பது அவசியமாகிறது.

பள்ளிக் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் சேர்த்தது, கல்வியின் தரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் செய்துள்ளது. நமது நாடாளுமன்றம் கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கியுள்ளது. கல்விக்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படும்போதும், பல்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது.

நிலம் தொடர்பான அனைத்து விஷயங்களும் மாநில அரசின் கண்காணிப்பில் இருந்தபோதும், நில கையகப்படுத்துதல் என்பது ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. இதனால், பெரும்பாலான திட்டங்களின் செலவுகள் அதிகரிக்கறது. பால் கறக்கும் விலங்குகளின் வர்தகம் மற்றும் விலங்குகள் வன்கொடுமை தொடர்பான சட்டங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்ற விதிமுறைகளால் பல்வேறு மாநிலங்களிலுள்ள கிராமங்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

மத்திய அரசுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளபோதும், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மக்களுக்கும் வழங்கும் பொறுப்பு மாநில அரசிடம் தரப்பட்டுள்ளது. அதாவது, சட்ட ஒழுங்கை பாதுகாப்பதும், விரைவான நிதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதும் மாநிலங்களின் பொறுப்பாகிறது.

இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறைவான பொறுப்புகளும் கடமைகளுமே உள்ளது. இருப்பினும் வருவாயின் பெரும்பகுதி மத்திய அரசுக்கே செல்கிறது. வருவாய் பங்கீடு பிரச்னை போக, சமூக மற்றும் பொருளாதார திட்டங்கள் அனைத்தும் ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். திட்ட குழு கலைக்கப்பட்டதால், நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதும், முடிவெடுப்பதில் அனைத்து அதிகாரங்களும் இன்னும் மத்திய அரசிடமே உள்ளது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வலுகட்டாயமாக மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, திட்டங்களுக்குத் தேவையான நிதியை மாநிலங்கள் பெறும். அரசியலமைப்பின் இந்தக் கட்டமைப்பு காரணமாகவும், மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்கள் உள்ளதாலும், நிதி கட்டமைப்பு பெரும்பாலும் மத்திய அரசிடம் உள்ளதாலும், திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதாலும், கூட்டாட்சி என்பது பெரிதும் பாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது.

நம்பிக்கையளிக்கும் மாற்றத்தின் அறிகுறிகள்

கூட்டாட்சி முறை ஒரளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது உன்மைதான்; அதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில், மொழிவாரியான மாநிலங்கள் பிரிப்பது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். இரண்டாவதாக தேசிய அளவில் அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள் அனைத்தும், மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய்ந்தது. இந்த ஆணையங்களின் பரிந்துரைகள் பெரும்பாலும் அமல்படுத்தப்பட்டன. இது நிதி தொடர்பான விஷயங்களில் கூட்டாட்சி கட்டமைப்பு வலுப்பெற உதவியுள்ளது. அதேபோல 1991ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுவாக்க உதவியது.

காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் முடிவுற்றதும், மாநில கட்சிகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின. இதனால் தேசிய கட்சிகளுக்கு மாநில நலனையும் உரிமையையும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 1994ஆம் ஆண்டு பொம்மை வழக்கில் (Bommai case of 1994) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்பைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 365ஐ பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைப்பது பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டது. 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பெருளாதார சீர்திருந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்ததிற்கு அரசு தள்ளப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், லைசென்ஸ் ராஜா முறை நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

இதுமட்டுமல்ல, மாநில அரசுகளும் தொழிலதிபர்களும் டெல்லியை சார்ந்திருக்கும் நிலைமையும் குறைந்தது. இதனால் மாநில அரசுகள் தங்கள் சொந்த கொள்கைகளை உருவாக்கி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடிந்தது. முந்தை காலங்களுடன் ஒப்பிடும் போது, அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. சுதந்திரமான வர்த்தகமும் தொழில் போட்டியும் அதிகரித்தன. சமீபத்தில் திட்ட குழு கலைக்கப்பட்டது மூலம், நிதி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கான நல்ல அறிகுறிகள்.

சட்டப்பிரிவு 365 இனிமேல் தவறாக பயன்படுத்தப்படாது என்று மக்கள் நம்பத்தொடங்கியபோது, அருணாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகரிப்படுவதை நோக்கி செல்வதையும் காட்டுகிறது. மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, மாநில அரசுகளின் நிதிநிலையை கடுமையாக பாதித்தது. மேலும், 15ஆவது நிதிக்குழு, கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தங்கள் அரசியல் ஆதாயங்களை அடைய மத்திய அரசு வருமான வரித் துறை, அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது. இவை அனைத்தும் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நம் நாட்டின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும் சுழலில், கூட்டாட்சி அமைப்பை பலப்படுத்துவது குறித்து தேசிய அளவிலான கலந்துரையாடல்கள் தேவை. நம் நாட்டில் ஒருங்கிணைப்பு, அதிகார பரவலாக்கம், முடிவுகளை எடுக்க சுயாட்சி, ஜனநாயகத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம்.

இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு

சீனா போன்ற சர்வாதிகார நாட்டில், அதிராக பரவலாக்கத்தை எளிதில் மேற்கொள்ளலாம். கடந்த 40 ஆண்டுகளில் சீன அடைந்துள்ள வளர்ச்சியின் முக்கிய காரணம், அதிகார பரவலாக்கமும், உள்ளாட்சி அமைப்புகளும், முடிவுகள் எடுப்பதில் காட்டப்படும் நெகிழ்வுதன்மையே ஆகும். ஜனநாயக இந்தியா, இவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், பொருளாதராத்தை மேம்படுத்தவும் அதிகார பரவலாக்கமும் ஒரு நாட்டின் எதிர்காலத்துக்கு மிக முக்கியம்.

இதையும் படிங்க: ஹார்ன் அடித்தால் ரெட் சிக்னல் மாறாது - ஒலி மாசை குறைக்க அட்டகாசமான ஐடியா

ABOUT THE AUTHOR

...view details